சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வரும் 'பொன்னியின் செல்வன்'

அடுத்த மாதம் (நவம்பர்) பொன்னியின் செல்வன் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.470 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் பல தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் ஓடிக்கொண்டு இருப்பதால் வசூல் ரூ.500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஓ..டி.டிக்கு விற்றுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் பொன்னியின் செல்வன் படம் ஓ.டி.டி.யில் ரூ.125 கோடிக்கு விலைபோய் உள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) பொன்னியின் செல்வன் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேதியை விரைவில் வெளியிட உள்ளனர். பொன்னியின் செல்வன் படம் ஓ.டி.டி. தளத்திலும் சாதனை படைக்கும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்