சினிமா செய்திகள்

பேய் வேடத்தில் ராய் லட்சுமி

நடிகர்களைப்போல் கதாநாயகிகளும் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க விரும்புகின்றனர்.

தினத்தந்தி

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அதுபோன்ற கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் நடித்த படங்கள் வசூல் சாதனைகளும் நிகழ்த்தி உள்ளன.

இதனால் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் கதைகளை டைரக்டர்கள் உருவாக்கி வருகிறார்கள். இப்போது ராய் லட்சுமி கதாநாயகன் இல்லாத படமொன்றில் பேய் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு சின்ட்ரல்லா என்று தலைப்பு வைத்துள்ளனர். வினோ வெங்கடேஷ் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, சின்ட்ரெல்லா திகில் கதையம்சம் உள்ள படம். ராய் லட்சுமி பேயாகவும் இசைக்கலைஞராகவும் இருவேடங்களில் வருகிறார். ஏற்கனவே 8 கதைகளை கேட்டு அவற்றில் நடிக்கும் யோசனையில் இருந்த ராய் லட்சுமிடம் சின்ட்ரல்லா கதையை சொன்னதுமே மற்ற படங்களை தவிர்த்து விட்டு இதில் நடிக்க வந்து விட்டார்.

அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும். படத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களும் இன்னொரு பகுதி பயமுறுத்துவதாகவும் இருக்கும். பேய் வேடத்துக்கு ராய் லட்சுமி 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வமித்ரா இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மார்ச் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்