சினிமா செய்திகள்

ஷங்கர் மகள் திருமண விழாவில் 'அப்படி போடு,போடு..' பாடலுக்கு ரன்வீர் சிங் நடனம்

டைரக்டர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமண விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார்.

சென்னை,

பிரபல டைரக்டர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமாகி சில பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து பெற்று பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம், உதவி டைரக்டர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் திருமண விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம்-சுஹாசினி, கே. கே. பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி, விஷ்ணு வர்தன், விக்னேஷ் சிவன்-நயன்தாரா, ரவி குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

இந்நிலையில், இவ்விழாவில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், அதிதி ஷங்கர் மற்றும் அவரது சகோதரர் அர்ஜித் ஷங்கருடன் விஜய் நடித்த கில்லி படத்தில் வரும் அப்படி போடு, போடு.. பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும், டைரக்டர் அட்லீயுடன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கும் நடனமாடினார். இது குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்