சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகருடன் ராஷ்மிகா காதல்?

தினத்தந்தி

தமிழில் கார்த்தியுடன் சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ராஷ்மிகாவும் தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் கீத கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது காதல் பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது.

விஜய்தேவரகொண்டாவின் குடும்ப நிகழ்ச்சியில் அந்த வீட்டு பெண் போலவே ராஷ்மிகா கலந்து கொண்டார். ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்றுவந்த புகைப்படங்களும் வெளியாகி காதலை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் காதலை ராஷ்மிகா முறித்துக்கொண்டு விட்டதாகவும் புதிதாக தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டசாய் ஸ்ரீநிவாஸ் மீது ராஷ்மிகாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலகிலும் இணைய தளங்களிலும் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கு அவர்கள் நெருக்கமாக இருந்தனர்.

விமானநிலையத்திலும் ராஷ்மிகாவையும் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸையும் ஜோடியாக பார்க்க முடிந்தது. தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக இருக்கும் பெல்லம் கொண்ட ஸ்ரீநிவாஸ் இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு