சினிமா செய்திகள்

நடிகர்களுக்கு சம்பள பாக்கியா? - நடிகர் சங்கம் புகாருக்கு தயாரிப்பாளர் பதில்

நடிகர்களுக்கு சம்பள பாக்கி என்ற நடிகர் சங்கம் புகாருக்கு, தயாரிப்பாளர் பதில் அளித்துள்ளார்.

தினத்தந்தி

கத்தி சண்டை, வீர சிவாஜி, 96 ஆகிய படங்களில் நடித்துள்ள விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்து இருப்பதாகவும் இனிமேல் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகர்-நடிகைகள் நடிக்க கூடாது என்றும் நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது. இதற்கு பதில் அளித்து நந்தகோபால் கூறியதாவது:-

கத்தி சண்டை படம் வெளியிடுவதற்கு முன்பே விஷாலுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டேன். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் மனசாட்சிபடி செயல்பட்டு வருகிறேன் 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் முழு ஊதியத்தையும் வழங்கி விட்டேன்.

இந்த நிலையில் எனது படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதில் நடிகர் சங்க நிர்வாகிகள் கையெழுத்து இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. எனக்கு எதிரான இந்த அறிக்கையை சிலர் வேண்டுமென்றே அனுப்பி இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) உரிய முடிவை எடுக்க வேண்டும். அதற்கு கட்டுப்படுவேன். தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால் நான் தொழில் செய்ய விடாமல் என்னை தடுப்பதாக டெல்லியில் உள்ள இந்திய தொழில் போட்டி ஆணையத்தில் புகார் செய்வேன்.

இவ்வாறு நந்தகோபால் கூறியுள்ளார்.


முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு