சினிமா செய்திகள்

’மகேஷ் பாபு பட ஆடிஷனுக்குச் சென்று அழுது கொண்டே திரும்பினேன்’ - பிரபல நடிகை அதிர்ச்சி கருத்து

ஒரு நடிகை மகேஷ் பாபு படத்தின் ஆடிஷனுக்குச் சென்று அழுது கொண்டே திரும்பி வந்ததாக கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். தற்போது மகேஷ் பாபு படப்பிடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், ஒரு நடிகை மகேஷ் பாபு படத்தின் ஆடிஷனுக்குச் சென்று அழுது கொண்டே திரும்பி வந்ததாகக் கூறினார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?. சமீரா ரெட்டிதான்.

ஒரு காலத்தில் தனது அழகு மற்றும் நடிப்பால் திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். தமிழில் அவர், சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இதற்கிடையில், அவர் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், எனது முதல் பட ஆடிஷன் 1998 இல் நடந்தது. அதுவும் மகேஷ் பாபு படத்திற்காக. அன்று நான் மிகவும் பயந்தேன். ஆனால், என்னால் சரியாக நடித்து காட்டமுடியவில்லை. அதனால் அழுது கொண்டே வீடு திரும்பினேன். சில நாட்களுக்குப் பிறகு, தைரியத்தை வரவழைத்து, ஒரு தனியார் ஆல்பத்திற்காக முதல் முறையாக கேமரா முன் வந்தேன், என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்