சினிமா செய்திகள்

“பீஸ்ட்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜய் 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தில் யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இன்று விஜய் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். பீஸ்ட் என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயின் பீஸ்ட் படம் குறித்த அப்டேட்கள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் டிரண்ட் செய்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு