சினிமா செய்திகள்

கமல்ஹாசன் படத்தில் சிவகார்த்திகேயன்

தினத்தந்தி

நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி டைரக்டு செய்கிறார். படவேலைகள் தொடங்கி உள்ளன. படப்பிடிப்பு தளத்துக்கு கமல்ஹாசன் நேரில் சென்று சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பெரும்பகுதி காட்சிகளை காஷ்மீர் பகுதியில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இது சிவகார்த்திகேயனுக்கு 21-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. "சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் இணைந்து பயணம் செய்வது மகிழ்ச்சி'' என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு