சினிமா செய்திகள்

தலைவர் 171 படத்தில் இணையும் நாகார்ஜுனா?

நடிகர் நாகார்ஜுனா தலைவர் 171 படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளாராம். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக ரஜினி தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். அதே சமயம் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் நாகார்ஜுனா தலைவர் 171 படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளாராம். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் நாகார்ஜுனா ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற 22-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை