சினிமா செய்திகள்

டாப்சி வளர்ச்சிக்கு உதவிய தைரியம்

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது இந்தி பட உலகிலும் பிரபல நடிகையாக வளர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது இந்தி பட உலகிலும் பிரபல நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

எனக்கு பிறந்ததில் இருந்தே தைரியம் அதிகம். ஆண்பிள்ளை மாதிரிதான் வளர்ந்தேன். அந்த தைரியம் இல்லாமல் இருந்திருந்தால் எனது சினிமா வாழ்க்கை எப்போதோ முடிந்து இருக்கும். எனக்கு எத்தனையோ தோல்விகள் வந்தன. அதற்காக கொஞ்சமும் பயப்படவில்லை. வெற்றிக்காக மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். நடிக்க வந்த புதிதில் எல்லா கதைகளையும் ஒப்புக்கொண்டு நடித்து தவறுகள் செய்தேன். இப்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் உன்னால் நடிக்க முடியுமா என்று வீட்டில் இருப்பவர்களெல்லாம் கேட்பார்கள். நான் முடியும் என்று சவாலாக எடுத்துக்கொண்டு தைரியமாக நடித்தேன். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் நீடிக்கிறேன். என் வளர்ச்சிக்கு தைரியம்தான் காரணம். எல்லா துறைகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தைரியம் இருக்க வேண்டும்.

இவ்வாறு டாப்சி கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை