சினிமா செய்திகள்

’இணையம் இனி உண்மையின் பிரதிபலிப்பு அல்ல’ - வைரலாகும் ராஷ்மிகாவின் பதிவு

செயற்கை நுண்ணறிவு குறித்து ராஷ்மிகா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு குறித்து ராஷ்மிகா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ''செயற்கை நுண்ணறிவு (AI) மனித முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி. ஆனால் அதை பெண்களுக்கு எதிராக சிலர் பயன்படுத்துகிறார்கள். இணையம் இனி உண்மையின் பிரதிபலிப்பு அல்ல; அது எதையும் கற்பனை செய்து உருவாக்கக்கூடிய ஓர் ஓவியப் பலகை.

ஏஐயை முன்னேற்றமான சமுதாயம் உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். பொறுப்பைத் தேர்வுசெய்யுங்கள்; பொறுப்பில்லாத தன்மையை அல்ல. மனிதர்களாக நடக்க முடியாதவர்கள் கடுமையான மற்றும் மன்னிப்பில்லாத தண்டனையைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்