சினிமா

துப்பறியும் புலனாய்வு அதிகாரியாக அரவிந்தசாமி!

சன்தோஷ் பி.ஜெயக்குமார் டைரக்டு செய்ய இருக்கும் புதிய படத்தில், அரவிந்தசாமி

தினத்தந்தி

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து சன்தோஷ் பி.ஜெயக்குமார் டைரக்டு செய்ய இருக்கும் புதிய படத்தில், அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பற்றி டைரக்டர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் கூறுகிறார்:-

படத்தின் கதையை தன் போக்குக்கு கொண்டு செல்லாமல், ரசிகனின் ரசனை அறிந்து கொண்டு செல்லும்போது, அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். அப்படி ஒரு படமாகவே இந்த புதிய படம் தொடங்க இருக்கிறது.

அரவிந்தசாமி ஒரு படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் என்றால், அந்த படம் கவனிக்கப்படும் படமாகத்தான் இருக்கும். துப்பறியும் திகில் சம்பந்தப்பட்ட இந்த கதையில், அரவிந்தசாமி புலனாய்வு துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். வி.மதியழகன் தயாரிக்கிறார். வருகிற ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்.

காட்சிகளுக்கான உணர்வை பின்னணி இசையிலும், பாடல்களிலும் கச்சிதமாக கொண்டு வரும் டி.இமான் இசையமைக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்துக்கு கதாநாயகி முடிவாகவில்லை. தொழில்நுட்ப ரீதியிலும், செலவிலும் பிரமாண்டமான படைப்பாக இந்த படம் உருவாகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்