முன்னோட்டம்

ஆயிரம் பொற்காசுகள்

விதார்த், அருந்ததி நாயருடன் புதையலை கருவாக கொண்ட ‘ஆயிரம் பொற்காசுகள்’ பல முன்னணி டைரக்டர்களிடம் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி முருகயா கதை- திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

கபாலி, தசாவதாரம், மதராச பட்டினம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் 39 வருடங்களாக செட்டிங் மாஸ்டர் ஆக பணிபுரிந்தவர், ஜி.ராமலிங்கம். சாபு சிரில், பிரபாகரன், முத்துராஜ், கதிர், ராஜீவன் ஆகிய கலை இயக்குனர்களிடம் உதவியாளராகவும் இருந்தவர். இவர், முதன்முதலாக ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு, ஆயிரம் பொற்காசுகள் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பல முன்னணி டைரக்டர்களிடம் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி முருகயா கதை- திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

இதில் விதார்த் கதாநாயகனாகவும், அருந்ததி நாயர் கதாநாயகியாகவும் நடிக்க, முக்கிய வேடத்தில் சரவணன் நடிக்கிறார். ஜோஹன் இசையமைக்க, கபிலன், நந்தலாலா ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். பானு முருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இது, ஒரு புதையலை கருவாக கொண்ட படம். கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமான படமாக உருவாகி வருகிறது என்கிறார், படத்தின் டைரக்டர் ரவி முருகயா.

சினிமா முன்னோட்டம்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி