முன்னோட்டம்

அனபெல் சேதுபதி

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் முன்னோட்டம்.

தினத்தந்தி

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமாகும் படம் அனபெல் சேதுபதி. விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியான், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணா கிஷோர் இசையமைத்துள்ளார். பிரதீப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்