புதுச்சேரி

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் ஊழியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

காரைக்கால்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் ஊழியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவி

புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

கோட்டுச்சேரியை சேர்ந்தவர் பால் எடிசன் (வயது33). இவர், அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மாணவி கல்லூரிக்கு சாலையில் நடந்து செல்லும்போது, அக்கறையோடு பால் எடிசன் விசாரித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் சென்ற மாணவியை தனது வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

அவரது பிடியில் இருந்து திமிறிய மாணவி அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தா. அப்போது, இது குறித்து யாரிடமாவது சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என பால் எடிசன் மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து மாணவி தனது தாயாரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் பால் எடிசன் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்