புதுச்சேரி

ரூ.12 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி

மணவெளி தொகுதியில் ரூ.12 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதி நாணமேடு பேட் பகுதியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.12 லட்சம் செலவில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பூங்காவனம், இளநிலைப் பொறியாளர் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகரிடம், இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்