உணவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரபலமான ‘சிக்கன் இன்சால்'’

பிலிப்பைன்சின் மூலை முடுக்கெல்லாம் புகழ்பெற்ற ‘சிக்கன் இன்சால்’ செய்முறையை பார்ப்போமா...

தினத்தந்தி

சிக்கன் இன்சால் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே உள்ள விசாயாஸ் தீவை பூர்வீகமாகக் கொண்ட உணவு. கோழியின் தொடைப்பகுதி இறைச்சியுடன் இஞ்சி, பூண்டு, சோயா சாஸ் போன்றவற்றை கலந்து, ஊறவைத்து செய்வார்கள். பிலிப்பைன்சின் மூலை முடுக்கெல்லாம் புகழ்பெற்ற சிக்கன் இன்சால் செய்முறையை பார்ப்போமா...

தேவையான பொருட்கள்

கோழியின் தொடைப்பகுதி - 3

சோயா சாஸ் - கப்

வினிகர் - கப்

எலுமிச்சம் பழச்சாறு - கப்

லெமன் சோடா - 1 கப்

நாட்டு சர்க்கரை - கப்

பொடிதாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்

பொடிதாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் - 1

லெமன் கிராஸ் - 2 தண்டு

கோழி தோல் - சிறிது (சுத்தப்படுத்தியது)

வெண்ணெய் - 50 கிராம்

செய்முறை

கோழியின் தொடைப்பகுதியை நன்றாகச் சுத்தம் செய்து, கத்தியால் கீறிவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், வினிகர், எலுமிச்சம் பழச்சாறு, லெமன் சோடா, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு, மிளகுத் தூள், வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். இந்தக் கலவையில், கீறி வைத்த கோழி தொடைகளை போட்டுக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

வாணலியில் மிதமான சூட்டில் சிறிது கோழி தோல்களை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். தோலில் உள்ள கொழுப்பு உருகி எண்ணெய்யாக வந்ததும் அதில் 2 நறுக்கிய பூண்டை போட்டு வதக்கிக்கொள்ளவும். பின் அந்த எண்ணெய்யில் 50 கிராம் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மைக்ரோ வேவ் அவனை கிரில் ஆப்ஷனில், 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்து கொள்ளவும். நன்றாக ஊறியிருக்கும் கோழி தொடைப்பகுதியை கிரில் கம்பியில் வைத்து, 15 நிமிடம் மைக்ரோ வேவ் அவனில் வைக்கவும். பின் வெளியில் எடுத்து, அதன் மீது தயார் செய்து வைத்திருக்கும் வெண்ணெய் கலந்த கலவையை பிரஷ் கொண்டு பூசவும்.

பின்பு மீண்டும் மைக்ரோ வேவ் அவனில் 15 நிமிடங்களுக்கு வைக்கவும். அதன் பிறகு வெளியில் எடுத்து மீண்டும் வெண்ணெய் கலவையை பூச வேண்டும். இறுதியாக மீண்டும் 15 நிமிடங்களுக்கு மைக்ரோ வேவ் அவனில் வைக்க வேண்டும். இப்போது சிக்கன் இன்சால் தயார். இது சாதத்துடன் உண்பதற்கு சரியான தேர்வாகும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்