ஆரோக்கியம் அழகு

மார்புத் தசைகளை உறுதியாக்கும் தனுராசனம்

உடலை வில்போல் பின்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு ‘தனுராசனம்’ என்ற பெயர் வந்தது.

பெண்கள் அன்றாடம் செய்யவேண்டிய ஆசனங்களில் முக்கியமானது தனுராசனம். தனுசு என்ற சொல் வில் எனும் பொருளைத் தரும். உடலை வில்போல் பின்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு தனுராசனம் என்ற பெயர் வந்தது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

செய்முறை:

1. தரையில் விரிப்பை விரித்து அதன்மேல் குப்புறக் கவிழ்ந்து படுக்கவும்

2. இரண்டு கைகளையும் பக்கவாட்டில் ஒட்டியபடி வைத்துக் கொள்ளவும்.

3. பின்பு இரண்டு கால்களையும் மடக்கி, வலதுகாலை வலது கையின் மூலமும், இடது காலை இடது கையின் மூலமும் நன்றாகப் பிடித்துக் கொள்ளவும்.

4. பின்னர் மெதுவாக மார்பு பகுதி, கழுத்து பகுதி, தலை இவற்றை வில்போல் வளைத்து முதுகுடன் சேர்த்து மேல் நோக்கி தூக்க வேண்டும்.

5. அவ்வாறு தூக்கும்போது வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் ஒட்டியிருக்க வேண்டும். ஏனைய பகுதிகள் வில் போல வளைந்து மேல் நோக்கி இருக்க வேண்டும்.

6. இந்த நிலையில் சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும்.

பயன்கள்:

இயற்கையான வழியில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் மார்பகங்களை உறுதிப்படுத்துவதற்கு தனுராசனம் உதவும். தினமும் குறிப்பிட்ட நேரம் தனுராசனம் செய்து வந்தால் போதுமானது.

இந்த ஆசனத்தை செய்வதால் அடிவயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்பு கரைந்து தொப்பை எளிதில் நீங்கும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டம் நடைபெறும்.

ஜீரணசக்தி மேம்படுவதோடு, கர்ப்பப்பை, மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். மேலும், தினமும் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் சோம்பல் நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை