கோப்புப்படம்  
கல்வி/வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்புக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (நேற்று) முதல் இணையவழியில் தொடங்கும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். வருகிற 20-ந்தேதி வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்னர், இதற்கான தரவரிசை பட்டியல் இம்மாதம் 25-ந்தேதியன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும். மேலும், எம்.எட். முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி முதல் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்