கல்வி/வேலைவாய்ப்பு

திறமையான தேர்வர்களை வேலைக்கு எடுக்க 'பிரதிபா சேது' திட்டம்-யுபிஎஸ்சி அறிமுகம்

இறுதிக்கட்ட தகுதி பட்டியலில் இடம்பெறாத திறமையான தேர்வர்களை மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வேலைக்கு எடுப்பதற்காக ‘பிரதிபா சேது’ என்ற திட்டத்தை யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்துகிறது. அந்த தேர்வுகளில் பல கட்டங்களில் வெற்றி பெற்ற போதிலும், நேர்முக தேர்வுக்கு பிறகு, இறுதிக்கட்ட தகுதி பட்டியலில் இடம்பெறாத தேர்வர்களை அடையாளம் காட்டும் விதமாக 'பொது வெளிப்படுத்தல் திட்டம்' என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. அறிமுகம் செய்தது.அந்த பட்டியலில் உள்ளவர்களில் இருந்து மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தகுதியான நபர்களை வேலைக்கு தேர்வு செய்து வந்தன.

இந்நிலையில், பொது வெளிப்படுத்தல் திட்டத்தை 'பிரதிபா சேது' என்ற பெயரில் யு.பி.எஸ்.சி. அறிமுகம் செய்துள்ளது.அதில், போட்டித்தேர்வுகளில் இறுதிக்கட்ட தகுதி பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள் பட்டியல் இடம்பெறும். அவர்களின் கல்வித்தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட சுய விவரங்கள் இருக்கும். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தேர்வர்கள் பெயர்கள் இருக்கும்.

வேலைக்கு ஆள் தேவைப்படும் தனியார் நிறுவனங்களும் தங்களை பற்றிய விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ளலாம்.வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களுக்கு 'லாகின்' ஐ.டி.யை யு.பி.எஸ்.சி. அளிக்கும். அதை பயன்படுத்தி உள்ளே நுழைந்து, தங்களுக்கு தேவையான நபர்களை அந்நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கலாம். மத்திய அரசு வேலைக்கு தேர்வான நபர்களுக்கு இணையான தகுதி கொண்ட நபர்களை வேலைக்கு எடுக்க இத்திட்டம் உதவுகிறது. மேலும், அந்த தேர்வர்களுக்கும் நல்ல வேலை கிடைக்க உதவுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்