இளைஞர் மலர்

பி.எப் நிறுவனத்தில் 2859 காலியிடங்கள்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இ.பி.எப்.ஓ) சமூக பாதுகாப்பு உதவியாளர்கள் (எஸ்.எஸ்.ஏ-2,674) மற்றும் ஸ்டெனோகிராபர்கள் (185) என மொத்தம் 2,859 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளை கம்ப்யூட்டரில் வேகமாக டைப்பிங் செய்யத்தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணி சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும். 26-4-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத்தகுதியானவர்கள்.

முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

27-3-2023 முதல் 26-4-2023 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்