இளைஞர் மலர்

ஐ.டி.பி.ஐ வங்கியில் பணி

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 1036 எக்சிகியூட்டிவ் பணி இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தினத்தந்தி

2-5-1998-க்கு முன்போ 1-5-2003-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

முதலாம் ஆண்டு மாதம் ரூ.29 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு 31 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் ஆண்டு 34 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மூன்றாண்டு பணியை சிறப்பாக மேற்கொள்பவர்களுக்கு உதவி மானேஜர் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை கோயம்புத்தூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-6-2023. தேர்வு நடைபெறும் நாள்: 2-7-2023.

மேலும் விரிவான விவரங்களை https://www.idbibank.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்