புதுச்சேரி

தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு

புதுவையில் விருதுக்கு தேர்வு செய்வதற்காக தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறந்த போலீஸ் நிலையங்களை தேர்வு செய்யும் பணியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், குற்றவாளிகளின் பட்டியல், வழக்குகள் பதிவு செய்யும் முறை, போலீஸ் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். முன்னதாக திருபுவனை போலீஸ் நிலையத்திலும் இந்த ஆய்வு நடந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்