செய்திகள்

பொத்தேரி ரெயில் நிலையம் அருகே 2½ கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி ரெயில் நிலையம் அருகே ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்கள் வைத்து கொண்டிருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் நேரில் சென்று பார்த்த போது அங்கு போலீசார் வருவதை கண்டதும் 3 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் (வயது 52), வாசு (23) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு