பெல்லாரி,
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி கிராமத்தை சேர்ந்த 101 வயது மூதாட்டியான ஹல்லம்மா என்பவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஏழு நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி உள்ளார் என்பது உறுதியானது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், டாக்டர்கள் என்னை நன்றாக கவனித்தனர், நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார். அவரது மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.