திருச்சிற்றம்பலம்,
டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாக தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு விவசாய பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும் என விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, 16-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது.
தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்துக்கு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை வழக்கமாக இந்த ஆண்டும் தர மறுத்தால் மழை பெய்தால் மட்டுமே இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்க முடியும் என்ற பரிதவிப்பில் விவசாயிகள் உள்ளனர்.