செய்திகள்

சாதியை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டவர் மீது வழக்கு

சாதியை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டவர் மீது வழக்கு.

தேனி,

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்படுகிறது. மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களில் சாதி, மத வன்மத்தை தூண்டும் வகையில் பதிவிடுபவர்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வேளாளர் இளைஞர் படை என்ற அமைப்பின் தகவல் தொடர்பாளர் சரவணன் என்பவர், சாதி வன்மத்தை தூண்டும் வகையிலும், குறிப்பிட்ட ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையிலும் வீடியோ பதிவிட்டுள்ளார். இதை கண்காணித்த, சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை