மும்பை,
தேர்வு தொடங்குவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு மும்பை சாக்கிநாக்காவில் உள்ள ஒரு தேர்வு மைய வளாகத்தில் மாணவி ஒருவர் தனது செல்போனில் இருந்து மற்ற மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாளை பகிர்ந்து கொண்டபோது சிக்கினார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வினாத்தாளை செல்போனில் வைத்திருந்த மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது, சாக்கிநாக்கா கைரானி சாலையில் டியூசன் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் பிரோஷ் யூசுப் அன்சாரி (வயது42) என்பவர் தனக்கு வினாத்தாள் அனுப்பியதாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மிராரோட்டை சேர்ந்த முஷாமில் இக்பால்(27) என்ற டியூசன் ஆசிரியருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரும் கைதானார். அவர்களுக்கு எந்த தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாள் கிடைத்தது என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.