தேனி :
தேனி அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ்பாண்டியன். இவரது மனைவி கார்த்திகை மலர். இவர்களது மகள் கனகபிரியா (வயது 15). இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் பாண்டியன் இறந்துவிட்டார். இதனால் கனகபிரியா மனமுடைந்து காணப்பட்டார்.
தந்தை இறந்த துக்கம் தாங்காமல் வாழ்க்கையில் வெறுப்படைந்தபடி அடிக்கடி புலம்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு கனகபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாஹியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.