மும்பை,
மும்பை கோரேகாவ் எஸ்.வி. ரோட்டில் டெக்னோ காம்ப்ளக்ஸ் என்ற 11 மாடி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வங்கி உள்பட முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் 7-வது மாடியில்கரும்புகையுடன் தீப்பற்றி எரியதொடங்கியது.
தீ விபத்தினால் அங்கிருந் தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேற தொடங்கினர். சிலர் வெளியே வர முடியாமல் கட்டிடத்தில் சிக்கி கொண் டனர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ராட்சத ஏணி மூலம் கட்டிடத்தில் சிக்கி இருந்த 4 பேரை மீட்டனர். கட்டிட நுழைவு வாயில் வழியாக சென்று கரும்புகையில் சிக்கி தவித்த மேலும் 5 பேரை மீட்டனர். இதன்பின்னர் 4 மணி நேரம் போராடி கட்டிடத்தில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் கட்டிடத் திற்குள் மேலும் 4 பேர் சிக்கி இருப்பது தீயணைப்பு துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் சென்று அவர்களை தேடினர்.
இதில் 7-வது மாடியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். மற்ற 3 பேர் பாதியில் நின்ற லிப்டில் சிக்கி கொண்டு இருந்தனர். 4 பேரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேர் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்கள் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நைமுதீன் ஷா (வயது25), ராமவதார் (45), ராம் திருத்பால் (45) மற்றும் சம்சாத் ஷா(35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட 9 வீரர்கள் காய மடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த ரம்சான் அலி கான் மற்றும் சலிம் மணியர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.