தர்மபுரி,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 208 அரசு பள்ளிகள், 66 தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 17 தனியார் சுயநிதி பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள், 4 உண்டு உறைவிட பள்ளிகள், ஒரு சமூகநலத்துறை பள்ளி என மொத்தம் 302 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 118 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதில் 55 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
உயர்நிலைப்பள்ளிகள்
இதன்படி ராமகொண்டஅள்ளி, பி.துரிஞ்சிப்பட்டி, மதியம்பட்டி, எஸ்.அம்மாபாளையம், ஆலமரத்துப்பட்டி, அவ்வைநகர், பாலஜங்கமனஅள்ளி, பரிகம், பூகானஅள்ளி, தாசரஅள்ளி, எலவடை, எல்லப்புடையான்பட்டி, கெட்டுஅள்ளி, கூல்கொட்டாய், கே.ஈச்சம்பாடி, கே.நடுஅள்ளி கெலப்பாறை, கோம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் கெட்டுமாரனஅள்ளி, கோவிலூர், லிங்கநாயக்கனஅள்ளி, மலையூர், முத்தானூர், பாலவாடி, பங்குநத்தம் கொட்டாய், புதுபாலசமுத்திரம், ராஜகொல்லஅள்ளி, சந்தாரப்பட்டி, சாஸ்திரமுட்லு, டி.அம்மாபேட்டை, டி.அய்யம்பட்டி, தாதநாயக்கன்பட்டி, வேலனூர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல் ஜம்மனஅள்ளி, காமலாபுரம், கன்னிப்பட்டி, கோணங்கிநாயக்கனஅள்ளி, மெணசி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதேபோல் பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் உள்ள மாதிரி பள்ளிகள் உள்பட 55 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 63 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
92.52 சதவீத தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை அரசு பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 980 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 92.52 ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.