மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு பொதுவினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

1,250 டன் அரிசி

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் 92 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,250 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக ராமநாதபுரம் மாவட்டதிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு