பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரிய கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து, கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி கடந்த 23-ந் தேதி பதவி ஏற்றார்.
அவருடன் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு விழா நடந்து ஒரு வாரம் ஆகியும் மந்திரிசபை இன்னும் விரிவாக்கம் நடக்கவில்லை. இரு கட்சிகள் இடையே இலாகாக்களை பங்கிட்டு கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளதால் இந்த மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.