மாவட்ட செய்திகள்

டாஸ்மாக், ரேஷன் கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி 19-ந்தேதி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக், ரேஷன் கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வருகிற 19-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கூறினார்.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள ரேஷன் கடை மற்றும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அண்மை காலமாக பல்வேறு சிக்கல், சிரமங்கள் உருவாகின்றன. பார்களை திறக்கும் நிலையில் அதன் உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை டாஸ்மாக் பணியாளர்களிடமிருந்து பெற்றிட நிர்பந்தப்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் மிரட்டி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதே போல் ரேஷன் கடை பணியாளர்கள் பல்வேறு இடையூறுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே டாஸ்மாக் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி வருகிற 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இ்வ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?