தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துகோட்டை வனப்பகுதியில் கேட்பாரற்று ஒரு நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று அந்த துப்பாக்கியை மீட்டனர். இதேபோல் அஞ்செட்டி அருகே கேரட்டி வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அஞ்செட்டி போலீசார் அங்கு சென்று துப்பாக்கியை மீட்டனர். இந்த துப்பாக்கிகளை போட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.