மாவட்ட செய்திகள்

வேலூரில் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை: கஸ்பாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

வேலூரில் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழையால், கஸ்பாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

வேலூர்,

வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. அன்று 99.5 டிகிரி வெயில் பதிவானது. நேற்று காலை 10 மணி முதல் வெயில் சுட்டெரித்தது. நேற்று அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் பதிவானது. மதியம் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மாலை 4 மணி முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறி காணப்பட்டது. மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது.

இடி, மின்னலுடன் 2 மணி நேரம் தொடர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கஸ்பாவில் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேபோல் காமராஜர் சிலை, கிரீன்சர்க்கிள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் வேலூரை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை