மாவட்ட செய்திகள்

2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் அருகே 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் லட்சுமணன் (வயது 38). ரவுடியான இவர் மீது விழுப்புரம் பகுதிகளில் 2 கொலை வழக்கு உள்பட பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதேபோல் விழுப்புரம் அருகே பேரங்கியூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வடிவேலன் (36) என்பவர் மீது 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக லட்சுமணன், வடிவேலன் ஆகிய இருவரையும் விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் லட்சுமணன், வடிவேலன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து லட்சுமணன், வடிவேலன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை