மாவட்ட செய்திகள்

கொரடாச்சேரி அருகே ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

கொரடாச்சேரி அருகே ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.

தினத்தந்தி

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள திட்டாணிமுட்டத்தை சேர்ந்தவர் கேசவன். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ரோகித்(வயது11). இவன், முசிரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பாலாஜி(10). இவன், வாழச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

ரோகித், பாலாஜி ஆகிய இருவரும் நேற்று மாலை திட்டாணிமுட்டத்தில் உள்ள பாண்டவையாற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் ரோகித், பாலாஜி ஆகிய இருவரும் ஆற்றில் மூழ்கினர்.

இதைப்பார்த்ததும் கரையில் நின்ற வாலிபர்கள் உடனே ஆற்றில் குதித்து நீந்திச் சென்று ரோகித்தையும், பாலாஜியையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் களை பரிசோதித்த டாக்டர்கள், ரோகித்தும், பாலாஜியும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்