மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் ‘ஏர்கம்பிரஷர்’ வெடித்து 2 ஊழியர்கள் படுகாயம் சாலையில் சென்ற 2 பேர் உயிர் தப்பினர்

தொழிற்சாலையில் ‘ஏர்கம்பிரஷர்’ வெடித்து 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த நேரத்தில் சாலையில் சென்ற 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மும்பை,

தானே மாவட்டம் டோம்பிவிலி எம்.ஐ.டி.சி. பேஷ் 2 பகுதியில் அலுபின் என்ற தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு ஏர்கம்பிரஷர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திர ஜாவ்லே(வயது59) என்பவர் உள்பட 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

ஏர்கம்பிரஷர் வெடித்து சிதறியதில் அதன் ஒரு பாகம் தொழிற்சாலையின் வெளியே உள்ள சாலையில் பறந்து வந்து விழுந்தது.

அந்த நேரத்தில் தொழிற்சாலை அருகே 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக ஏர்கம்பிரஷர் பாகம் அவர்கள் மீது விழவில்லை. இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஊழியர்கள் இருவரையும் மற்ற ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மான்பாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்