மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டத்தில் சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேர் கைது

நாகை மாவட்டத்தில் சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து நாகை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக போலீசார் மயிலாடுதுறை, சோழவித்தியாபுரம், பொரவாச்சேரி, செல்லூர், தெண்ணலக்குடி, சீர்காழி, வாட்டாகுடி, தலைஞாயிறு, வெள்ளப்பள்ளம், மாரச்சேரி, திருபயத்தங்குடி, அகரமணல்மேடு, அளக்குடி, கொள்ளிடம், மங்கைமடம் மற்றும் முளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம், மதுபாட்டில்கள் கடத்தி வந்த வெளிப்பாளையம் நண்டுகுளத்தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ரவிந்திரன் (வயது 23), சோழவித்யாபுரம் நடுத்தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் சதீஷ்குமார் (33), செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துப்பிள்ளை மகன் கேடி கண்ணன் (52), அதே பகுதியை சேர்ந்த விஜயக்குமார் மனைவி திவ்யா (33), வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் சாலையை சேர்ந்த சுரேஷ் மனைவி மாரிஸ்வரி உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 475 லிட்டர் புதுச்சேரி சாராயமும், ஆயிரத்து 48 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்