மாவட்ட செய்திகள்

தமிழக மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 24 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற் படையினர் சிறைபிடித்து சென்றனர்.

நாகப்பட்டினம்,

கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்று விடுகின்றனர். மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. தற்போது மீன்பிடி தடைக் காலம் முடிந்து கடந்த 14-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த பழனியாண்டி மகன் வடிவேல் (வயது32) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த சக்திவேல் (38), முகேஷ் (30), வினோத் (31), ரமேஷ்குமார் (28), ராஜேந்திரன் மகன்கள் ராஜசேகர் (30), செல்வம் (32), சங்கர் (48), செந்தில் (28) ஆகிய 8 பேரும் கடந்த 21-ந்தேதி இரவு நாகையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு இலங்கை பருத்தித்துறை அருகே தென்கிழக்கே வெற்றிலைக் கேணிப் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

சிறைபிடிப்பு

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் விசைப் படகை சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும், மீனவர்களின் விசைப் படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கரைப் பேட்டை மீனவர்களின் உறவினர்கள் பெரும் கலக்கத் தில் உள்ளனர். 61 நாட்கள் வீட்டில் இருந்து விட்டு தற்போது, தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ள தால் நாகை மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம்

இதைப்போல ராமேசுவரத் தில் இருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். மேலும் படகுகளை விரட்டி அடித்து மீனவர்களை தாக்கினர்.

மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த சக்திவேல் என்ப வருக்கு சொந்தமான விசைப்படகையும் அதில் இருந்த மீனவர்கள் பால்ராஜ் (வயது55), நாகநாதன்(30), ராஜூ (35), முருகன் (27), மற்றொரு முருகன் (50), உக்கரம்(35) ஆகிய 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இதே போல புதுக்கோட்டை மாட்டம் ஜெகதாபட்டினத் தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 படகையும் 10 மீனவர்களையும் பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்று விட்டனர். தமிழக மீனவர்கள் மொத்தம் 24 பேர் சிறைபிடிக்கப் பட்டுள்ளது அவர்களின் குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி