திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீசார் அரண் மனைக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் மறித்து சோதனை நடத்தினர். சோதனையில் அனுமதியின்றி சரக்கு ஆட்டோவில் மணல் ஏற்றி வந்தது இலந்தைகூடத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 28), மணல் ஏற்றி வர உதவிபுரிந்த திருமழபாடி அருள்பாண்டியன்(26), மதியழகன் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.