மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்து 3 வீடுகள் இடிந்தன விவசாயி மீது வழக்கு

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்து 3 வீடுகள் இடிந்து விழுந்தன.விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

திருச்சூர்,

திருச்சூரை அடுத்த எருமைபட்டி குண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். விவசாயி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் பலத்த சத்தத்துடன் அந்த வீடு இடிந்து விழுந்தது. மேலும் அதன் அருகே உள்ள 2 வீடுகளும் இடிந்தன. அவற்றில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையே வீடுகள் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தம் காரணமாக அக்கம்பக்கத்தினர் தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்த்தனர். பின்னர் எருமைபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தின் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீப்பொறியால் பட்டாசுகள் வெடித்து அவருடைய வீடு மற்றும் அருகில் உள்ள 2 வீடுகள் இடிந்து விழுந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு