மாவட்ட செய்திகள்

மேலும் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல்லில் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் எருமைக்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் ஒரு கும்பல், கடைக்குள் புகுந்து மணிகண்டனை வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.

அதில் 3 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அந்த கொலை வழக்கில் தொடர்புடைய பொன்னிமாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பெருமாள் (23), என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (24), நல்லாம்பட்டியை சேர்ந்த கணேசன் (35) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை