மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் 3 சிலைகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் சிங்க உருவ கற்சிலை என 3 பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவள்ளூரை அடுத்த காக்களூர் கிருஷ்ணா கால்வாய் செல்லும் நீர் வழித்தடத்தில் பழங்கால அம்மன் சிலைகள் கிடப்பதாக திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் அருணா, திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சோதனையிட்ட போது 2 அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்ட அம்மன் சிலை, 2 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட சிமெண்டாலான பழங்கால அம்மன் சிலை மற்றும் 9 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட சிங்க உருவ கற்சிலை என 3 பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட 3 சிலைகளையும் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் உதவியுடன் திருவள்ளூர் தாலுகா அலுவலகம் பதிவு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மேலும் இந்த சிலைகளின் பழமை தன்மையை அறிய சோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு