மாவட்ட செய்திகள்

அரசியல் கட்சியினர் மீது 32 வழக்குகள் பதிவு

தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மீது 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

தேனி:

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் நடத்தை விதிகளை மீறும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். தேனியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதாக 32-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் செல்வம், 19-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதுபோல், மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், தி.மு.க.வினர் மீது 20 வழக்குகள், அ.தி.மு.க.வினர் மீது 7 வழக்குகள், அ.ம.மு.க.வினர் மீது 2 வழக்குகள், பா.ஜ.க.வினர் மீது 2 வழக்குகள், பெரியகுளத்தில் வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு என பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் உட்கோட்டம் வாரியாக பெரியகுளத்தில் 10, போடியில் 9, உத்தமபாளையத்தில் 6, தேனியில் 7 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டி உட்கோட்டத்தில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்