மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.

தினத்தந்தி

கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மெதுமெதுவாக குறைந்து வந்தது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. இதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து வேகமாக குறைய தொடங்கியது. கடந்த சில நாட்களாக சுமார் 50 பேர் தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 7 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 49 பேர் குணமடைந்தார்கள். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 509 ஆக உயர்ந்தது. 356 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 142 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ஊஞ்சலூர்

இந்த நிலையில் கொடுமுடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் உத்தரவின் பேரில் ஊஞ்சலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று, கொரோனா பரிசோதனை செய்ய விருப்பத்தின் பேரில் பொதுமக்களை அழைத்து வந்தார்கள். சுமார் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி