திம்பம் மலைப்பாதை
தாளவாடியை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழ்நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலம் செல்வதற்கான முக்கிய பாதையாகும். அதனால் கார், பஸ், லாரி, மோட்டார்சைக்கிள்கள் எப்போதும் சென்று வந்தபடி இருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள்தான்
வளைவுகளை கடக்க முடியால் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது.
4 மணி நேரம்...
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திக்கு மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. அதிகாலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது பழுதாகி நின்றுவிட்டது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பக்கவாட்டில் உள்ள வழியில் சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. பின்னர் காலை 9 மணி அளவில் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி ரோட்டின் ஓரத்துக்கு இழுத்து வரப்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு பிறகே கனரக வாகனங்கள் செல்ல தொடங்கின