அப்போது அந்தந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை மாட்டு வண்டியில் கடத்தியது தெரிய வந்தது. அதையொட்டி மணல் கடத்தலில் ஈடுபட்ட செவிலிமேடு பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 28), ரவி (30), திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்கிற முஸ்தபா (38), ராஜேஷ்குமார் (25), நரேஷ் (20), சரோன் (19), புஞ்சையரசன் தாங்களை சேர்ந்த சுதாகரன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.