மாவட்ட செய்திகள்

டி.வி. நடிகையை கற்பழித்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு ஜெயில்

டி.வி. நடிகையை கற்பழித்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தினத்தந்தி

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் முகேஷ் மிஸ்ரா. டி.வி. தொடர் நிர்வாக தயாரிப்பாளராக இருந்து வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு பவாயில் உள்ள கத்தாரிஸ் ஸ்டூடியாவில் சீரியல் தொடருக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த தொடரில் நடிக்கும் ஒரு நடிகை ஒப்பனை அறையில் தனியாக இருந்தார்.

இதை கவனித்த முகேஷ் மிஸ்ரா அந்த அறைக்குள் நுழைந்து நடிகையை மிரட்டி கற்பழித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகேஷ் மிஸ்ராவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, நடிகையை கற்பழித்த குற்றத்துக்காக தயாரிப்பாளர் முகேஷ் மிஸ்ராவுக்கு நீதிபதி 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்